விழிப்புணர்வு தாய்ப்பால் கொடுத்தால் மார்பக புற்றுநோய் வராது

தாய்ப்பால் கொடுத்தால் மார்பக புற்றுநோய் வராது

பதிவர்: நிர்வாகி, வகை: விழிப்புணர்வு  
படம்

ஆக.11, 2015:- தாய்ப்பால் கொடுத்தால் பெண்களுக்கு மார்பக் புற்று நோய், ஓவரி புற்று நோய் வராது என கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


காரைக்குடி அரசு மருத்துவமனையில் ஹெரிடேஜ் ரோட்டரி சங்கம் சார்பில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு குழந்தை பெற்ற தாய் மார்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் கருத்தரங்கு நடந்தது. செயலாளர் நாச்சியப்பன் வரவேற்றார். தலைவர் சுதர்சன் ஸ்ரீனிவாசன் தலைமை வகித்தார். டாக்டர்கள் முத்தையா, தேவகுமார் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

கருத்தரங்கில் குழந்தைகள் பிரிவு டாக்டர் அருள் தாஸ் பேசுகையில், ‘குழந்தை பிறந்த அரை மணி நேரத்திற்குள் தாய்ப்பால் தர வேண்டும். அறுவை சிகிச்சையில் பிறந்த 2 மணி நேரத்திற்குள் தரலாம். முதல் 2, 3 நாட்களில் சுரக்கும் பால் சீம்பால் எனப்படும்.

 இதில் அதிகமான புரதச்சத்து, நோய் எதிர்ப்பு சத்துக்கள் உள்ளன. குழந்தை பிறந்த 2 வாரத்தில் தனது எடையில் 10 சதவீதம் குறையும். 3ம் வாரத்தில் இருந்து எடை கூட ஆரம்பிக்கும். குழந்தைக்கு 2 மணி நேரத்திற்கு ஒரு முறையும், அதிகபட்சமாக 2 வயது வரையும் தாய்ப்பால் தருவது நல்லது.

தாய்ப்பால் கொடுப்பதால் பெண்களுக்கு மார்பக புற்று நோய், ஓவரி புற்று நோய் வராமல் தடுக்கப்படும். பிறந்த ஒரு மணி நேரத்திற்குள் பால் கொடுப்பதால் தாய்க்கு ரத்தப் போக்கு குறையும். 6 மாதங்களுக்கு பிறகு தாய்ப்பாலுடன் இணை உணவு தரலாம். கழுதைப் பால், சீனித் தண்ணீர், சர்க்கரை ஆகியவற்றை பிறந்தவுடன் தரும் பழக்கம் சில இடங்களில் உள்ளது. இது தவறான பழக்கம். இதனால் குழந்தைக்கு உயிரிழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது’ என்றார்.

உங்களது கருத்துக்கள் உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன!
தமிழ் / ஆங்கிலத்தில் எழுத இங்கே சொடுக்கவும் [CTRL+G]யை சொடுக்கியும் மாற்றி கொள்ளலாம்
CAPTCHA code
இந்த படத்தில் உள்ள எழுத்துக்களை உள்ளீடவும்