இந்தியா மேகி நூடுல்ஸ் விளம்பரத்தில் நடித்த ஹிந்தி நடிகை மாதுரி தீட்சித்துக்கு நோட்டீஸ்!

மேகி நூடுல்ஸ் விளம்பரத்தில் நடித்த ஹிந்தி நடிகை மாதுரி தீட்சித்துக்கு நோட்டீஸ்!

பதிவர்: நிர்வாகி, வகை: இந்தியா  
படம்

மே.29, 2015:- ‘மேகி நூடுல்ஸ்’ தொடர்பான விளம்பரங்களில் நடித்த ஹிந்தி நடிகை  மாதுரி தீட்சித்துக்கு உணவு பாதுகாப்பு ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. நெஸ்லே இந்தியா நிறுவனத்தின் தயாரிப்பான ‘மேகி நூடுல்ஸ்’  இந்தியா முழுவதும் குழந்தைகள் மற்றும் பெரியவர்களின் விரும்பும்  உணவாக உள்ளது.

இந்த நூடுல்சின் தரம் குறித்து சமீபத்தில் நாடு முழுவதும் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது இந்த நூடுல்சில் மோனோ சோடியம் குளூட்டாமேட் என்ற அமினோ அமிலம் அளவுக்கு அதிகமாக  சேர்த்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து உத்தரபிரதேச மாநில சந்தைகளில் இருந்து இந்த நூடுல்சை திரும்ப பெற நெஸ்லே இந்தியாவுக்கு உத்தரவிடப்பட்டது.
இந்நிலையில் ‘மேகி நூடுல்ஸ்’ சின் விளம்பர தூதராக ஹிந்தி நடிகை  மாதுரி தீட்சித் செயல்பட்டு வருகிறார்.

தற்போது இந்த நூடுல்ஸ் சர்ச்சையில் சிக்கியதைத் தொடர்ந்து அவருக்கு உத்தரகாண்ட் மாநில உணவு பாதுகாப்பு அதிகாரிகள்  நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.


அதில், நீங்கள் இந்த நூடுல்சை வழக்கமாக உண்டு வந்தீர்களா? இந்த நூடுல்ஸ் ஆரோக்கியத்துக்கு சிறந்தது என்று எந்த அடிப்படையில் நீங்கள் முடிவு செய்தீர்கள்? மேகி கோதுமை நூடுல்ஸ் 3 சப்பாத்திகளுக்கு இணையானது என்று எப்படி கூறினீர்கள்? என்பது போன்ற பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன.

இதற்கிடையில் மேகி நூடுல்சை சோதிக்க எப்எஸ்எஸ்ஏஐ (FSSAI) எனப்படும் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரக் கட்டுப்பாட்டு ஆணையம் உத்தரவிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதில் நச்சுப்பொருட்கள் அதிகளவில் கலந்திருப்பது தெரியவந்தால் அதன் விற்பனைக்கு தடை விதிக்கப்படக் கூடும் என்றும் கூறப்படுகிறது.
 
தங்கள் தயாரிப்பு மீதான குற்றச்சாட்டை மறுத்துள்ள நெஸ்லே நிறுவனம் இத்தகவலை மக்களிடம் கொண்டு செல்ல பெரிய அளவில் விளம்பரங்கள் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

உங்களது கருத்துக்கள் உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன!
தமிழ் / ஆங்கிலத்தில் எழுத இங்கே சொடுக்கவும் [CTRL+G]யை சொடுக்கியும் மாற்றி கொள்ளலாம்
CAPTCHA code
இந்த படத்தில் உள்ள எழுத்துக்களை உள்ளீடவும்