தமிழ்நாடு வெள்ளம் பாதித்த மாவட்டங்களில்.. அடித்துச் செல்லப்பட்ட அதிமுக!

வெள்ளம் பாதித்த மாவட்டங்களில்.. அடித்துச் செல்லப்பட்ட அதிமுக!

பதிவர்: நிர்வாகி, வகை: தமிழ்நாடு  
படம்

2015ம் ஆண்டு கடுமையான வெள்ளம் மற்றும் மழையால் பெரும் பாதிப்பைச் சந்தித்த சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் திமுகவே அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இங்கு அதிமுக 2வது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.

கடந்தாண்டு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதத்தில் வரலாறு காணாத கனமழையால் தலைநகர் சென்னை உட்பட தமிழகத்தில் சில மாவட்டங்கள் கடும் பாதிப்பைச் சந்தித்தன. ஆளும் கட்சியின் அஜாக்கிரதையாலேயே இந்த வெள்ளம் ஏற்பட்டதாக மக்கள் குற்றம் சாட்டினர்.

தற்போது தங்களின் கோபத்தை தமிழக சட்டசபைத் தேர்தலில் தங்கள் தொகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்கள் காட்டியுள்ளனர் என்றே கூறலாம். இது வெள்ளம் பாதித்த பகுதிகளில் அதிமுகவின் வெற்றி குறைந்துள்ளது மூலமும் தெரிய வந்துள்ளது.

திமுகவுக்கு அதிகம்...

சென்னையில் உள்ள 16 தொகுதிகளில் திமுகவுக்கு 10 தொகுதிகள் கிடைத்துள்ளன. அதிமுகவுக்கு 6 மட்டுமே கிடைத்தது. திருவள்ளூர் மாவட்டத்தில் மொத்தம் 10 தொகுதிகள் உள்ளன. இதில் 7 தொகுதிகளை அதிமுகவும், 3 தொகுதிகளை திமுகவும் வென்றன. காஞ்சிபுரம் மாவட்டத்தில் 11 தொகுதிகள் உள்ளன. இதில் திமுகவுக்கு 9 தொகுதிகளும் 2 தொகுதிகள் மட்டும் அதிமுகவுக்கும் கிடைத்தன.

அதிமுகவுக்கு குறைவு...

ஆக மொத்தம், இந்த மூன்று மாவட்டங்களில் மொத்தமாக உள்ள 37 தொகுதிகளில் திமுகவுக்கு 22 தொகுதிகள் கிடைத்துள்ளன. அதிமுகவுக்கு 15 தொகுதிகளும் கிடைத்துள்ளன.

சென்னையில்...

சென்னை மாவட்டத்தில் உள்ள 16 தொகுதிகளில் திமுகவுக்கு கொளத்தூர், வில்லிவாக்கம், திரு.வி.க.நகர், எழும்பூர், துறைமுகம், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி, ஆயிரம் விளக்கு, அண்ணா நகர், சைதாப்பேட்டை, வேளச்சேரி ஆகிய தொகுதிகள் கிடைத்துள்ளன.

ஆர்.கே.நகர்...

சென்னையில் அதிமுகவுக்குக் கிடைத்த தொகுதிகள் இவை: ஆர்.கே.நகர், பெரம்பூர், ராயபரம், விருகம்பாக்கம், தியாகராய நகர், மயிலாப்பூர். இதில், ஆர்.கே.நகர் தொகுதியில் அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

திருவள்ளூரில்...

திருவள்ளூர் மாவட்டத்தில் அதிமுகவுக்கு 7 தொகுதிகள் கிடைத்துள்ளன. அவை: கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, திருத்தணி, பூந்தமல்லி, ஆவடி, மதுரவாயல், அம்பத்தூர். திருவள்ளூர் மாவட்டத்தில் திமுகவுக்குக் கிடைத்த 3 தொகுதிகள்: திருவள்ளூர், மாதவரம், திருவொற்றியூர்.

காஞ்சிபுரம்...

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 11 தொகுதிகளில் திமுக 9 தொகுதிகளை வென்றது. அவை: சோழிங்கநல்லூர், ஆலந்தூர், பல்லாவரம், தாம்பரம், செங்கல்பட்டு, செய்யூர், மதுராந்தகம், உத்திரமேரூர், காஞ்சிபுரம். இதேபோல், அங்கு அதிமுக வென்ற தொகுதிகள்: ஸ்ரீபெரும்புதூர், திருப்போரூர்.

உங்களது கருத்துக்கள் உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன!
தமிழ் / ஆங்கிலத்தில் எழுத இங்கே சொடுக்கவும் [CTRL+G]யை சொடுக்கியும் மாற்றி கொள்ளலாம்
CAPTCHA code
இந்த படத்தில் உள்ள எழுத்துக்களை உள்ளீடவும்