தமிழ்நாடு அரசியல் வியாபாரத்தில் பாமக தோற்றுவிட்டது: அன்புமணி

அரசியல் வியாபாரத்தில் பாமக தோற்றுவிட்டது: அன்புமணி

பதிவர்: நிர்வாகி, வகை: தமிழ்நாடு  
படம்

அரசியல் கட்சிகள் தேர்தலை வியாபாரமாக செய்கிறார்கள். நாங்கள் சேவையாக செய்தோம். அதனால்தான் அரசியல் எனும் வியாபாரத்தில் நாங்கள் தோற்றுவிட்டோம் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி கூறியுள்ளார்.

வெற்றி பெற்ற அதிமுகவுக்கு வாழ்த்து. வலுவான எதிர்க்கட்சியாக செயல்பட உள்ள திமுகவுக்கு வாழ்த்துகள். நல்ல திட்டங்களை விட பணத்தை மக்கள் விரும்புகின்றனர்.லஞ்சம் வாங்காமல் பாமகவுக்கு வாக்களித்த 23 லட்சம் வாக்காளர்களுக்கு நன்றி என்றும் அவர் தெரிவித்தார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தோல்வியைத் தழுவிய நிலையில், சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அன்புமணி தேர்தல் தோல்விக்கான காரணங்களை கூறினார்.

எதைப்பற்றியும் நாங்கள் கவலைப்படாமல், நிச்சயமாக மக்கள் எங்களைக்கு வாய்ப்புக் கொடுப்பார்கள் என்ற நம்பிக்கையோடு அடுத்த 5 ஆண்டு காலத்திலும் பணியாற்றுவோம். முன்பை விட வேகமாக செயல்படுவோம். கடந்த 15 மாதத்தில் இருந்ததை விட, அதிக வேகத்தில் பணியாற்றுவோம்.


நாங்கள்தான் எதிர்கட்சி

கடந்த ஐந்தாண்டு காலமாக தமிழ்நாட்டின் எதிர்க்கட்சியாக செயல்பட்டது நாங்கள்தான். அதைவிட அதிக வேகமாக நாங்கள் இப்போது செயல்படுவோம். மக்கள் எங்களுக்கு வெற்றியைக் கொடுக்கவில்லை. ஆனால் எங்களை ஏற்றுக் கொண்டார்கள்.

பணம் விளையாடியது

தமிழகத்தில் நடந்த தேர்தலில் 234 தேர்தலிலும், இவ்விரு கட்சிகளும் பணத்தைக் கொடுத்து வெற்றி பெற்றிருக்கிறார்கள். இது எல்லாவற்றுக்கும், ஊடகத்துக்கும், உலகத்துக்கும் தெரியும்.

வேகமாக பணியாற்றுவோம்

எதைப்பற்றியும் நாங்கள் கவலைப்படாமல், நிச்சயமாக மக்கள் எங்களைக்கு வாய்ப்புக் கொடுப்பார்கள் என்ற நம்பிக்கையோடு அடுத்த 5 ஆண்டு காலத்திலும் பணியாற்றுவோம். முன்பை விட வேகமாக செயல்படுவோம். கடந்த 15 மாதத்தில் இருந்ததை விட, அதிக வேகத்தில் பணியாற்றுவோம்.    

வெற்றி எங்களுக்கே

வித்தியாசமான அரசியல் முன்னோடிகளாக நாங்கள் இருந்திருக்கின்றோம். இப்போது பாட்டாளி மக்கள் கட்சி ஏற்படுத்திய நிலைப்பாடு, தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் மதுவை நாங்கள் ஒழிப்போம் என்ற நிலைப்பாட்டை எடுத்தது எங்களால்தான். அதன் மூலம் தேர்தலுக்கு முன்பாகவே நாங்கள் வெற்றிபெற்றுவிட்டோம்.

வாக்காளர்களுக்கு நன்றி

வெற்றி பெற்ற அதிமுகவுக்கு வாழ்த்து. வலுவான எதிர்க்கட்சியாக செயல்பட உள்ள திமுகவுக்கு வாழ்த்துகள். நல்ல திட்டங்களை விட பணத்தை மக்கள் விரும்புகின்றனர். லஞ்சம் வாங்காமல் பாமகவுக்கு வாக்களித்த 23 லட்சம் வாக்காளர்களுக்கு நன்றி.

பணத்தால் தோற்றேன்

இந்த தேர்தலில் பணம் வெற்றி பெற்றுள்ளது. பணத்தால் நாங்கள் தோற்கடிக்கப்பட்டுள்ளோம். பல அரசியல் கட்சிகள் தேர்தலை வியாபாரமாக செய்கிறார்கள். நாங்கள் தேர்தலை சேவையாக செய்கிறோம். அதனால்தான் தேர்தல் எனும் வியாபாரத்தில் நாங்கள் தோற்றுவிட்டோம்.

மாற்றத்தை ஏற்படுத்தினோம்

நாங்கள் மக்களிடையே நல்ல மாற்றத்தை ஏற்படுத்திவிட்டோம். நாங்கள் கொண்டு வந்த திட்டங்களை மக்கள் இன்னமும் பேசிக் கொண்டுதான் இருக்கிறார்கள். இன்னும் சில நாட்களில் பாமக நிர்வாகக் குழு கூடி அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து முடிவு செய்வோம் என்று கூறினார்.

தேர்தல் அதிகாரி சரியில்லை

தமிழகத்தில் தேர்தல் நடைபெற்றால் வட மாநிலத்தைச் சேர்ந்தவர்களை தேர்தல் அதிகாரிகளாக இங்கு நியமனம் செய்யவேண்டும். ஆளுங்கட்சியினர் பணப்பட்டுவாடா செய்வதாக புகார் அளித்தால் அவர்கள் மீது தேர்தல் அதிகாரிகள் யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளார் டாக்டர் அன்புமணி.

உங்களது கருத்துக்கள் உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன!
தமிழ் / ஆங்கிலத்தில் எழுத இங்கே சொடுக்கவும் [CTRL+G]யை சொடுக்கியும் மாற்றி கொள்ளலாம்
CAPTCHA code
இந்த படத்தில் உள்ள எழுத்துக்களை உள்ளீடவும்