தமிழ்நாடு சர்ரென இறங்கிய அதிமுக வெற்றி சதவீதம்.. திமுகவுக்கு மளமள ஏற்றம்!

சர்ரென இறங்கிய அதிமுக வெற்றி சதவீதம்.. திமுகவுக்கு மளமள ஏற்றம்!

பதிவர்: நிர்வாகி, வகை: தமிழ்நாடு  
படம்

தமிழக சட்டசபைக்கு 2011ம் ஆண்டு நடந்த தேர்தலில் 3 முனைப் போட்டி நிலவியது. அதிமுக தலைமையில் தேமுதிக, சிபிஎம், சிபிஐ, மனிதநேய மக்கள் கட்சி, புதிய தமிழகம், அகில இந்திய பார்வர்ட் பிளாக் ஆகியவை போட்டியிட்டன.

திமுக கூட்டணியில் காங்கிரஸ், பாமக, விடுதலைச் சிறுத்தைகள், கொங்கு மக்கள் முன்னேற்றக் கழகம் ஆகியவை போட்டியிட்டன. பாஜக தனித்துப் போட்டியிட்டது. மதிமுக தேர்தலைப் புறக்கணித்தது. அதிமுக இத்தேர்தலில் ஆட்சியைக் கைப்பற்றியது.

அதிமுக 160 தொகுதிகளில் போட்டியிட்டு, 150 தொகுதிகளில் வெற்றி கண்டது. தேமுதிக 41 தொகுதிகளில் போட்டியிட்டு 29 தொகுதிகளில் வென்றது.

வெற்றி தொகுதிகள்

திமுக 119 தொகுதிகளில் போட்டியிட்டு 23 தொகுதிகளில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் 63 தொகுதிகளில் போட்டியிட்டு 5 தொகுதிகளில் வென்றிருந்தது. இந்திய யூனியன் முஸ்லீம் லீக் 3 தொகுதிகளில் போட்டியிட்ட போதிலும், எதிலும் வெற்றி பெறவில்லை.

குறைவு

இம்முறை அதிமுக 234 தொகுதிகளிலும் போட்டியிட்டது (7 தொகுதிகளில் கூட்டணியினர் களமிறங்கினாலும் அவர்களுக்கும், இரட்டை இலை சின்னம்தான்). அதில் 232 தொகுதிகளுக்கு ரிசல்ட் வந்துள்ள நிலையில் 134 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.

மளமள சரிவு

அதாவது கடந்த முறை அதிமுக வெற்றி சதவீதம் 93.75 என்ற அளவில் இருந்துள்ளது. ஆனால் இம்முறை அது 57.75 என்ற அளவில்தான் உள்ளது. பெரும்பான்மையை நிரூபிக்க ஜஸ்ட் பாஸ் என்ற வகையில் தாண்டி சென்றுள்ளது அதிமுக.

ஏற்றம்

அதேநேரம், திமுகவின் வெற்றி சதவீதம் கடந்த தேர்தலில் 19.32 என்ற அளவில் இருந்தது. இம்முறை, 179 தொகுதிகளில் திமுக போட்டியிட்டது (3 தொகுதிகளில் கூட்டணியினர் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட்டனர்). 89 தொகுதிகளில் திமுக வெற்றி பெற்றுள்ளது. திமுகவின் வெற்றி சதவீதம் 49.72 என்ற அளவில் உள்ளது.

காங்கிரஸ் நிலை

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கடந்த தேர்தலில் எந்த தொகுதியிலும் வெற்றிபெறவில்லை. இம்முறை 5 தொகுதிகளில் போட்டியிட்டு, அதில் 1ல் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி 41 தொகுதிகளில் போட்டியிட்டபோதிலும், வெறும் 8 தொகுதிகளில் வென்றுள்ளது. இதன் வெற்றி சதவீதம், 19.51 ஆகும். கடந்த தேர்தலில் காங்கிரசின் வெற்றி சதவீதம், 7.93 சதவீதம் ஆகும்.

உங்களது கருத்துக்கள் உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன!
தமிழ் / ஆங்கிலத்தில் எழுத இங்கே சொடுக்கவும் [CTRL+G]யை சொடுக்கியும் மாற்றி கொள்ளலாம்
CAPTCHA code
இந்த படத்தில் உள்ள எழுத்துக்களை உள்ளீடவும்