இந்தியா விமானத்தில் பா.ஜனதா ஆதரவாளர் என்னுடைய கழுத்தை நெரிக்க முயற்சித்தார் - கன்னையா குமார்

விமானத்தில் பா.ஜனதா ஆதரவாளர் என்னுடைய கழுத்தை நெரிக்க முயற்சித்தார் - கன்னையா குமார்

பதிவர்: நிர்வாகி, வகை: இந்தியா  
படம்

ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் பாரதீய ஜனதா ஆதரவாளர் என்னுடைய கழுத்தை நெரிக்க முயற்சி செய்தார் என்று கன்னையா குமார் டுவிட்டரில் கூறிஉள்ளார்.

தேசத்துரோக வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்க தலைவர் கன்னையா குமார் செல்லும் இடமெல்லாம் எதிர்ப்புக்கள் இருந்து வருகிறது. கன்னையாவிற்கு எதிராக மக்கள் கோஷம் எழுப்புவதும், கன்னையா செல்லும் கார்மீது தாக்குதல் நடத்துவதும், கன்னையா குமார் மீது ஷூ வீசுவதும் வழக்கமாகி உள்ளது.

இந்நிலையில் புதியதாக விமானத்தில் என் மீது தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது என்று கூறிஉள்ளார்.

கன்னையா குமார் ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் பாரதீய ஜனதா ஆதரவாளர் என்னுடைய கழுத்தை நெரிக்க முயற்சி செய்தார் என்று கூறிஉள்ளார்.

மீண்டும் ஒரு தாக்குதல், இப்போது விமானத்தில், விமானத்தில் பாரதீய ஜனதா ஆதரவாளர் என்னுடைய கழுத்தை நெரிக்க முயற்சி செய்தார். டி.சி.எஸ். நிறுவனத்தில் பணியாற்றும் மனாஸ் தேகா என்ற தீவிர பாரதீய ஜனதா ஆதரவாளர் என்னை தாக்க முயற்சித்தார் என்று கன்னையா கூறிஉள்ளார்.

இச்சம்பவத்தை அடுத்து ஜெட் ஏர்வேஸ் நிறுவன ஊழியர்கள் என்னை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மறுத்துவிட்டது என்றும் குறிப்பிட்டு உள்ளார். இதுதொடர்பாக மும்பை விமான நிலையத்தில் போலீசார் ஒருவரை கைது செய்து உள்ளனர்.

டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் பேரவை தலைவர் கன்னையாகுமார் இன்று புனே மாவட்டம் பால்கந்தர்வா அரங்கத்தில் நடக்கும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்கிறார். இந்த நிலையில் அப்பகுதி போலீசார் கன்னையா குமாருக்கு நோட்டீசு ஒன்றை வழங்க உள்ளனர்.

144 தடை சட்டத்தின் கீழ் நிகழ்ச்சியில் பேசும்போது மற்றவர்களின் உணர்ச்சிகளை தூண்டும் வகையிலோ அல்லது மற்றவர்களின் மனது புண்படும் வகையிலோ பேசக்கூடாது’’ என கன்னையா குமாருக்கு இந்த நோட்டீசில் அறிவுருத்தப்பட்டுள்ளது.

உங்களது கருத்துக்கள் உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன!
தமிழ் / ஆங்கிலத்தில் எழுத இங்கே சொடுக்கவும் [CTRL+G]யை சொடுக்கியும் மாற்றி கொள்ளலாம்
CAPTCHA code
இந்த படத்தில் உள்ள எழுத்துக்களை உள்ளீடவும்