தமிழ்நாடு இளைஞர்களின் ஓட்டுகளை கவர அதிமுக - திமுக திட்டம்

இளைஞர்களின் ஓட்டுகளை கவர அதிமுக - திமுக திட்டம்

பதிவர்: நிர்வாகி, வகை: தமிழ்நாடு  
படம்

தமிழகத்தில், இறுதி வாக்காளர் பட்டியலின்படி, 5.79 கோடி வாக்காளர்கள் உள்ளனர். அதில், 40 வயதுக்கு உட்பட்டவர்கள், 38 சதவீதம்; 30 வயதுக்கு உட்பட்டவர்கள், 26 சதவீதம்; புதிய வாக்காளர்கள், 12.6 சதவீதம் பேர். இதில், இளைய சமுதாயத்தினரின் ஓட்டுகளை கவர, அனைத்து கட்சியினரும், புது யுக்திகளை கையாண்டு வருகின்றனர்.

'வாட்ஸ் ஆப் மற்றும் பேஸ்புக்' போன்ற சமூக வலைதளங்களை, இளைஞர்கள் அதிகம் பயன்படுத்துவதால், அதில் பிரசாரம்

மேற்கொள்வதில், கட்சியினர் முனைப்பு காட்டுகின்றனர்.தமிழகத்தில் தினமும், 2.5 கோடி பேர், சமூக வலைதளங்களை பயன்படுத்துவதாக, தொலைத்தொடர்பு புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இதனால், சட்டசபை தேர்தலில், சமூக வலைதளங்கள் முக்கிய இடம் பிடித்துள்ளன. இதில் மேற்கொள்ளும் பிரசாரத்துக்காக, கட்சிகள், கணிசமான தொகையை ஒதுக்கியுள்ளதாகவும், தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுமட்டுமின்றி, இளைஞர்களை கவரும் வகையில், அ.தி.மு.க., - தி.மு.க., தேர்தல் அறிக்கையில், 'ஸ்மார்ட் போன்' வழங்கும் திட்டம், முக்கிய இடங்களில், இலவச 'வை -- பை' சேவை, இலவச கேபிள் இணைப்பு, கேபிள் இணைப்பில் இன்டர்நெட் பயன்பாடு உட்பட, பல முக்கியஅறிவிப்புகள் இடம்பெறும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

அ.தி.மு.க., நிர்வாகி ஒருவர் கூறுகையில், 'இளைஞர்களின் ஓட்டுகளை கவரும் வகையிலான திட்டங்கள், தேர்தல் அறிக்கையில், பிரதானமாக இடம்பெறும்' என்றார்.

தி.மு.க., மாவட்ட செயலர் ஒருவர் கூறுகையில், 'தொகுதிக்கு தேவையான திட்டங்கள் குறித்த பட்டியல் தயாரிக்கப்பட்டு, இரு மாதங்களுக்கு முன்பே, மேலிடத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. 'நமக்கு நாமே' சுற்றுப்பயணம், இளைஞர்களை அதிகம் கவர்ந்துள்ளது. எனவே, இளைய சமுதாயத்தை கவர, தகவல் தொழில்நுட்ப ரீதியான அறிவிப்புகள், தேர்தல் அறிக்கையில் இடம்பெறும்' என்றார்.

உங்களது கருத்துக்கள் உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன!
தமிழ் / ஆங்கிலத்தில் எழுத இங்கே சொடுக்கவும் [CTRL+G]யை சொடுக்கியும் மாற்றி கொள்ளலாம்
CAPTCHA code
இந்த படத்தில் உள்ள எழுத்துக்களை உள்ளீடவும்