இந்தியா குதிரையின் காலை உடைத்த பாரதீய ஜனதா எம்.எல்.ஏ. கணேஷ் ஜோஷி டேராடூனில் கைது!

குதிரையின் காலை உடைத்த பாரதீய ஜனதா எம்.எல்.ஏ. கணேஷ் ஜோஷி டேராடூனில் கைது!

பதிவர்: நிர்வாகி, வகை: இந்தியா  
படம்

குதிரையின் காலை உடைத்த பாரதீய ஜனதா எம்.எல்.ஏ. கணேஷ் ஜோஷி டேராடூனில் கைது செய்யப்பட்டார்.

உத்தரகாண்ட் மாநில அரசை கண்டித்து பா.ஜனதா கட்சி சார்பில் டேராடூனில் கடந்த 14–ந் தேதி போராட்டம் நடந்தது. அப்போது பாதுகாப்புக்கு வந்த குதிரை போலீஸ்படையை சேர்ந்த ‘சக்திமான்’ என்ற குதிரையின் முன்னங்காலில் பா.ஜனதா எம்.எல்.ஏ. கணேஷ் ஜோஷி தடியால் அடித்தார். மற்றொருவர் கடிவாளத்தை இழுத்து குதிரையை கீழே தள்ளினார். இதில் அந்த குதிரை கீழே விழுந்து காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.

இதுதொடர்பாக போலீசார் எம்.எல்.ஏ. மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர். பிரமோத் போரா என்பவர் தான் குதிரையை கீழே தள்ளியவர் என அடையாளம் கண்டனர். இதனைத் தொடர்ந்து முஹானி என்ற பகுதியில் பிரமோத் போராவை போலீசார் கைது செய்தனர். காயமடைந்த குதிரைக்கு ராணுவ டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர்.

குதிரை வலியால் துடித்து வருவதாகவும், நிற்க முடியாமல் அவதிப்படுவதாகவும் மாநில அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

டேராடூனில் குதிரை சத்திமானுக்கு அறுவை சிகிச்சை நடைபெற்றது. அறுவை சிகிச்சையானது வெற்றிகரமாக முடிந்தது என்று டாக்டர்கள் தெரிவித்தனர். குதிரையினால் இப்போது நிற்க முடிகிறது என்று மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

சமூக வலைதளங்களில் விமர்சனம்

இருப்பினும் அறுவை சிகிச்சையை அடுத்து குதிரையின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. புகைப்படங்கள் அனைவரையும் கண்கலங்க செய்து உள்ளது.

பாரதீய ஜனதா எம்.எல்.ஏ.வை வசைப்பாடிய சமூக வலைதள பயனாளர்கள், பாரதீய ஜனதா தலைமை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

முற்றிலும் மனிததன்மையற்ற செயல் என்று கண்டனம் தெரிவித்தனர்.

இதற்கு காரணமாக குண்டர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
 
ரோகன் என்பவர் பதிவு செய்து உள்ள கருத்தில், “கடவுளே குதிரையை காப்பாற்றுங்கள்... உங்களுடைய கருணையை காட்டுங்கள்... சத்திமானே உண்மையான வீரர்... பேச முடியாத இந்த விலங்கிற்கு நான் தலைவணங்குகிறேன்,” என்று கூறிஉள்ளார்.

முன்னதாக பாரதீய ஜனதா கட்சியின் தலைவர், மத்திய மந்திரி மேனகா காந்தி எம்.எல்.ஏ.வை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்றும் கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

பாரதீய ஜனதா கட்சியின் எம்.பி. ஹேம மாலினி, ”அப்பாவி விலங்கின் மீது இதுபோன்ற காரியத்தை யாராலும் செய்ய முடியுமா என்று என்னால் நம்ப முடியவில்லை! இதற்கு கண்டனம் தெரிவிக்கின்றேன். குதிரை உயிர் பிழைத்ததற்கு கடவுளுக்கு நன்றி,” என்று டுவிட்டரில் கருத்து தெரிவித்து இருந்தார்.

எம்.எல்.ஏ. கைது

இந்நிலையில் குதிரையின் காலை உடைத்த பாரதீய ஜனதா எம்.எல்.ஏ. கணேஷ் ஜோஷி டேராடூனில் கைது செய்யப்பட்டு உள்ளார்.

உங்களது கருத்துக்கள் உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன!
தமிழ் / ஆங்கிலத்தில் எழுத இங்கே சொடுக்கவும் [CTRL+G]யை சொடுக்கியும் மாற்றி கொள்ளலாம்
CAPTCHA code
இந்த படத்தில் உள்ள எழுத்துக்களை உள்ளீடவும்