படித்ததில் பிடித்தது இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் கண்ட கனவை நடைமுறைபடுத்திய சிக்கிம் மாநில முதல்வர்

இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் கண்ட கனவை நடைமுறைபடுத்திய சிக்கிம் மாநில முதல்வர்

பதிவர்: நிர்வாகி, வகை: படித்ததில் பிடித்தது  
படம்

பவன் குமார் சாம்லிங் அவர்களுக்கு தலை வணங்கி வணக்கம் செலுத்துகிறேன் தமிழக  இயற்கை வேளாண் விஞ்ஞானி மரியாதைக்குரிய மறைந்த அய்யா நம்மாழ்வார் கண்ட கனவை சிக்கிம் முதல்வர் அவர்கள் நடைமுறைபடுத்தி வெற்றிகண்டு மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரமாக திகழ்கிறார் அய்யாவின் தொண்டர்கள் இருக்கும் தமிழகத்தில் இயற்கை வேளாண்மை முறையை  அமல்படுத்த போராட ஊக்கமாக திகழ்கிறது இந்நிகழ்வு.

பவன் குமார் சாம்லிங்   பிறப்பு: 22 செப்டம்பர், 1950) இந்தியாவில் இணைக்கப்பட்டபின் உருவான சிக்கிம் மாநிலத்தின் ஐந்தாவது முதலமைச்சர் ஆவார். சாம்லிங் சார்ந்துள்ள சிக்கிம் சனநாயக முன்னணி 1994 ஆம் ஆண்டுமுதல் நான்கு முறை -1994, 1999, 2004, 2009 தேர்தல்களில் வென்று ஆட்சி அமைத்துள்ளது.

வாழ்க்கை

ஓர் சமூக சேவகராக இருந்த சாம்லிங் "நிர்மாண்" இதழின் தலைமை ஆசிரியராக பணிபுரிந்தார். 1973ஆம் ஆண்டு மாணவராக இருந்தபோதே அரசியல் நாட்டம் கொண்டார்.1985ஆம் ஆண்டு சிக்கிம் சட்டப்பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.1989 முதல் 1992 வரை மாநில அரசின் தொழில்,தகவல் மற்றும் மக்கள்தொடர்பு அமைச்சராகப் பணியாற்றினார்.1993ஆம் ஆண்டு சிக்கிம் சனநாயக முன்னணி கட்சியை நிறுவினார். இவரது கட்சி 1994ஆம் ஆண்டு தேர்தலில் வென்று முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். இதனைத் தொடர்ந்து 1999, 2004 மற்றும் 2009 தேர்தல்களிலும் வெற்றி பெற்று முதலமைச்சராகத் தொடர்கிறார்.

பல நூல்களை வெளியிட்டுள்ளார்.1967ஆம் ஆண்டு அவரது முதல் நூல்,பிர் கோ பரிச்சய் வெளியானது.திருமணமான இவருக்கு நான்கு மகள்களும் நான்கு மகன்களும் உள்ளனர்.2003ஆம் ஆண்டு மணிப்பால் பல்கலைக்கழகம் கௌரவ மருத்துவர் பட்டம் வழங்கியுள்ளது.

இவர் பெயர் பவன்குமார் சம்லிங் சிக்கிம் முதலமைச்சர்.. கடந்த 2003 ஆம் ஆண்டு சட்டசபையில் சிக்கிம் மாநிலத்தை ரசாயனம் இல்லாத இயற்க்கை விவசாய முறைக்கு மாற்றுவேன் என்று ஒரு தீர்மானத்தை நிறைவேற்றினார்,சிக்கிம் மாநிலத்தில் ரசாயன உரங்கள் விற்க தடை விதித்தார் தடையை மீறுவோருக்கு 1லட்சம் அபராதம் 3 வருட சிறை தண்டனை போன்றவற்றை கடுமையாக அமல் படுத்தினார்

12 வருட கடும் உழைப்பிற்கு பிறகு 2016 ஆம் ஆண்டு சிக்கிம் மாநிலம் முழுவதும் உள்ள 75000 ஹெக்டேர் நிலமும் ரசாயனம் அற்ற இயற்கை பூமியாகி விட்டது

சிக்கிம் சனநாயக முன்னணி (Sikkim Democratic Front) இந்திய மாநிலமான சிக்கிமின் மிகப்பெரும் அரசியல்கட்சியும் ஆட்சி புரிகின்ற கட்சியுமாகும். இக்கட்சியை முதலமைச்சர் பவன் குமார் சாம்லிங் தலைமையேற்று நடத்துகிறார். இக்கட்சி 1994ஆம் ஆண்டு முதல் ஆளும்கட்சியாக உள்ளது. 2004ஆம் ஆண்டின் பொதுத்தேர்தலில் 32 பேரவை இடங்களில் 31ஐ கைப்பற்றி மிகப் பெரும் வெற்றியை நாட்டியது. 2009ஆம் ஆண்டு தேர்தல்களில் அனைத்து (32) இடங்களிலும் வென்று சாதனை படைத்துள்ளது. சிக்கிமின் ஒரே மக்களவைத் தொகுதியிலும் வென்றுள்ளது.

இந்த மனிதரின் நல்ல குணத்துக்காகவே சிக்கிம் மக்கள் தொடர்ந்து 5 முறை முதலமைச்சராக இவரை வைத்துள்ளனர்
25 வருடமாக ஒரே முதலமைச்சர் இவர் மகனும் ஒரு சமூக சேவகர்

சிக்கிம் முதல்வரை போன்று மற்ற மாநில முதல்வர்களும் இரசாயன உரங்கள், பூச்சிகொல்லி மருந்துகளை தவிர்த்து  இயற்கையான முறையில் விவசாயம் செய்து நல்ல ஆரோக்கியமான சத்தான உணவை இந்திய மக்களுக்கு அளிப்போம் ஊட்டச்சத்து மிக்க குழந்தைகளை இந்த பாரதம் நாடு  பெறட்டும்.

தமிழக அரசியல்வாதிகள் இலவசங்களை அறிவிப்பதை விட்டு இயற்கையான விவசாய முறைக்கு ஊக்கம் ஊட்டுவோம் நம்மாழ்வார் கனவை சிக்கிம் மாநிலம் நிறைவேற்றிவிட்டது தமிழகத்தில் எப்போது நிறைவேற்றும் ஆயிரம் கேள்விகளுடன் .

உங்களது கருத்துக்கள் உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன!
தமிழ் / ஆங்கிலத்தில் எழுத இங்கே சொடுக்கவும் [CTRL+G]யை சொடுக்கியும் மாற்றி கொள்ளலாம்
CAPTCHA code
இந்த படத்தில் உள்ள எழுத்துக்களை உள்ளீடவும்