படித்ததில் பிடித்தது எத்தனை போலீஸ் ஆபிசருக்கு இந்த தில் இருக்கு?

எத்தனை போலீஸ் ஆபிசருக்கு இந்த தில் இருக்கு?

பதிவர்: நிர்வாகி, வகை: படித்ததில் பிடித்தது  
படம்

ஹரியானாவில் நடைபெற்ற (27th November 2015) ஒரு மக்கள் குறைகேட்பு கூட்டம் ஒன்றில் அதிகாரிகளோடு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திருமதி.சங்கீதா கலியா IPS கலந்து கொண்டார். அந்த கூட்டத்தில் ஹரியானா மாநில சுகாதாரத்துறை அமைச்சர் திரு. அனில் விஜ்ஜூம் கலந்து கொண்டார்.

பொதுமக்களில் ஒருவர் எழுந்து நின்று அமைச்சரிடம் "கள்ளச்சாராயம் நம் மாவட்டத்தில் பெருமளவு பெருகிவிட்டது. இதைத்தடுக்க என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.?" என்று கேட்டார். இதை உங்கள் மாவட்ட SP உங்களுக்கு விளக்குவார் என்று கூறி அமைச்சர் நழுவிவிட்டார்.

உடனே SP திருமதி கலியா "ஆமாம் சாராயக் குற்றம் பெருகியது உண்மைதான். ஆனால் நம் மாவட்டத்தில் மட்டும் சுமார் 2,500 வழக்குகள் Excise Act ன்படி(இது ஒரு சாதனை மற்றும் மிகப்பெரிய மைல்க்கள்) பதிவுசெய்யப்பட்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு வருகிறார்கள்" என்று மிகவும் வெளிப்படையாகவும், தைரியமாகவும் அமைச்சரின் முன்பே அந்த நபரின் கேள்விக்கு பதிலளித்தார்.

இது அமைச்சர் அனில் விஜ்ஜூக்கு உறுத்தலை அதிகரித்து, மனஅழுத்தத்திற்கு உள்ளாக்கியது. (மாநிலத்தில் குற்றம் அதிகரித்துவிட்டது என்ற வார்த்தை அவர் அங்கம் வகிக்கும் அரசிற்கு ஒரு அவமானம் என்று உணர்ந்துவிட்டார் போல!)
உடனே மக்களை, கடவுளுக்கு அடுத்த இடத்திலிருந்து காவல் காக்கும் ஒரு உயர்காவல் அதிகாரி என்றுகூட பொருட்படுத்தாமல் "நீ இந்தக் கூட்டத்தைவிட்டு முதலில் வெளியேறு. (GET OUT ) இல்லையென்றால் நான் வெளியேறுகிறேன்" என்று SPயை பார்த்து சுகாதாரத்துறை அமைச்சர் பேசினார்.

உடனே திருமதி.சங்கீதா கலியா IPS "நான் தவறு ஏதும் செய்யவில்லை. தவறான கருத்து எதையும் தெரிவிக்கவில்லை. மக்களை காக்கும் பணிசெய்யும் நான், உண்மையை வெளிப்படையாக மக்களுக்கு கூறியுள்ளேன். நான் ஏன் வெளியேற வேண்டும்.? வேண்டுமென்றால் தவறுசெய்தவர்கள் வெளியேறட்டும்" என்று தைரியமாக கூறினார்.
இப்படியொரு கண்டிப்பான காவல்அதிகாரியை, சினிமாவில் மட்டுமே பார்த்த அமைச்சர், கூட்டத்தைவிட்டு அசிங்கப்பட்டு வெளியேறினார். கூட்டத்தை வெற்றிகரமாகவும் வெளிப்படையாகவும் நடத்தி முடித்தார் SP.கலியா.

பின்னர் 24மணிநேரம்கூட ஆகவில்லை. நாம் சினிமாவில் இதுவரை பார்த்த அதே அமைச்சரின், அரசியலின் அசிங்கமான செயல்கள் அறங்கேறியுள்ளது. ஆமாம் எந்தவித விசாரணையுமின்றி திருமதி SP. Sangeetha Kalia IPS இன்று காலை 11 மணியளவில் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

ஊழல்அரசியல்வாதியை தைரியமாக எதிர்த்த இந்த பெண்போலிஸ் அதிகாரிக்கு வாழ்த்துகள்.

உங்களது கருத்துக்கள் உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன!
தமிழ் / ஆங்கிலத்தில் எழுத இங்கே சொடுக்கவும் [CTRL+G]யை சொடுக்கியும் மாற்றி கொள்ளலாம்
CAPTCHA code
இந்த படத்தில் உள்ள எழுத்துக்களை உள்ளீடவும்