ராஜபாளையம் அருகே 1,500 ஆண்டு பழமையான முதுமக்கள் தாழிகள்!
ராஜபாளையம் அருகே 1,500 ஆண்டு பழமையான புதை விடங்களில் ஏராளமான முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
விருதுநகர் மாவட்டம் ராஜ பாளையம் அருகே உள்ள தேவ தானத்தில் இருந்து சாஸ்தா கோயிலுக்குச் செல்லும் வழியில் அமைந்துள்ள நெடும்பரம்பு மலை அருகே உள்ள செம்மண் குன்றில் 50-க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழி கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து அப்பகுதியில் ஆய்வு செய்து வரும் ராஜபாளையம் ராஜுக்கள் கல்லூரியின் வரலாற்றுத் துறை பேராசிரியர் போ.கந்தசாமி கூறியதாவது:
மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்துள்ள இப்பகுதி தேவி ஆற்றின் வளத்தால் செம்மண் பூமியாகக் காணப்படுகிறது. இங் குள்ள மண் குன்றில் சுமார் 1,500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பழங்கால மனிதர்களின் சடலம், எலும்புத் துண்டுகளை முதுமக்கள் தாழியில் வைத்து அடக்கம் செய் துள்ளனர்.
அதில் மனித எலும்புத் துண்டு கள், பல சிறுசிறு மண் கலயங் களில் தானியங்கள், இறந்து போன வர்கள் பயன்படுத்திய இரும்புப் பொருட்களான சூரி, கத்தி, பண்ணை, அரிவாள் ஆகியவை யும் கிடைத்துள்ளன. இக்குன்றின் மேற்பரப்பில் சிறு மண்பாண்டங் கள், மண் கலயங்கள், உலை மூடி, விளக்குப்போடும் கிளியஞ் சட்டிகள், மக்கிப்போன மனித எலும்புத் துண்டுகள், துருப்பிடித்த இரும்புப் பொருட்கள் ஆகியவை பரவலாகக் காணப்படுகின்றன.
பல நூற்றாண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மக்களின் புதைவிடமாக வும், இடுகாடாகவும் இப்பகுதி இருந்துள்ளது என்பதை சான்றுகள் மூலம் அறியமுடிகிறது. சங்க இலக்கியங்களிலேயே தாழியில் வைத்து அடக்கம் செய்தது குறித்து பல இடங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இங்கு இரும்பால் செய்யப்பட்ட பொருட்களும், இரும்பு கசடுகளும் காணப்படுவதால் 1,500 ஆண்டு களுக்கு முன்பே தாதுப் பொருட் களில் இருந்து இரும்பைப் பிரித் தெடுக்கும் சிறந்த அறிவை இங்கு வாழ்ந்த மக்கள் பெற்றிருந்தனர் என்பதையும் உறுதி செய்ய முடி கிறது. முதுமக்கள் தாழிகள் சுடு மண் ணால் செய்யப்பட்டவை. இவ் வகைத் தாழிகளில் இறந்தவர்களின் சடலத்தை வைத்து அடக்கம் செய் வது இயலாதது என்று தொல்லியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
ஏனெனில் இவற்றின் அளவு ஒரு மனிதனின் சடலத்தை உள்ளே வைக்கும் அளவுக்கு இல்லை என்பதும், ஒரே தாழியில் ஒன்றுக்கும் மேற்பட்ட எலும்புகள் கண்டறியப்பட்டுள்ளதும் அவர்கள் கருத்தை உறுதிப்படுத்துகின்றன. எனவே, முதுமக்கள் தாழிகள் இரண் டாவது நிலை அடக்கத்துக்குப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.
முதுமக்கள் தாழி ஓடுகளைக் கொண்டு வெப்ப உமிழ் வினை மூலம் அதன் காலத்தை துல்லிய மாக அறியலாம். இதுபோன்ற முது மக்கள் தாழியைக் கொண்டு அந்த மக்களின் வாழ்விடங்களைக் கண்ட றிந்து அவர்களின் பண்பாட்டுப் பழக்க வழக்கங்களையும் தொல்லி யல் ஆய்வு மூலம் வெளிக்கொணர முடியும்.
இத்தகைய மரபுச் செல்வங் களின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களி டையே ஏற்படுத்துவதற்காக யுனெஸ்கோ நிறுவனம் ஆண்டு தோறும் ஏப்ரல் 18-ம் தேதியை (இன்று) ‘உலக மரபுச் செல்வங் கள் தினம்’ என அறிமுகப்படுத்தி உலகம் முழுவதும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.