கட்டுரைகள் சல்லிக்கட்டு தடை‬ செய்யபடுவதின் உண்மையான காரணம்!

சல்லிக்கட்டு தடை‬ செய்யபடுவதின் உண்மையான காரணம்!

பதிவர்: நிர்வாகி, வகை: கட்டுரைகள்  
படம்

‎சல்லிக்கட்டு தடை‬ செய்யபடுவதின் உண்மையான காரணம்

1978ம் ஆண்டு ஒரிசா மாநிலம் காலாஹந்தி மாவட்டத்தில் மஃபட்லால் நிறுவனத்தின் NGO சத்குரு சேவாசங்கம், SBI மற்றும் ஒரிசா மாநில கால்நடை & வருவாய்த் துறை ஆகியவை இணைந்து ஏழை விவசாயிகளுக்கு கரவைமாடும் அதற்குத் தேவையான தீவனம் வளர்க்க நிலமும் இலவசமாக வழங்கின. இந்த இலவச நிலத்தில் மாட்டுத்தீவனம் வளர்ப்பதற்கு ஊதியமும் தரப்பட்டது....


எவ்வளவு நல்ல திட்டம்... அனைவராலும் பாராட்டப்பட்டு...உள்ளூர் மக்களிடம் சிறந்த வரவேற்பையும் பெற்றது....

இந்தத் திட்டத்தின் மேல் ஒரு சிறிய * பொறிக்கப்பபட்டிருந்தது...
வேற ஒன்னு இல்லிங்க .. நிபந்தனைக்குட்பட்டது (terms & condition) தான் அது....


கொடுக்கப்பட்ட மாடுகள் அனைத்தும் புனேயிலிருந்து கொண்டுவரப்படும் ஜெர்சி மாடுகளின் உயிரணு மூலம் ஊசிமூலமாக மட்டுமே சினை ஊட்டப்பட வேண்டும்..என்பதே அந்தக் கண்டிசன்.

‪மாடு, நிலம்‬ இலவசம்... அந்த நிலத்தில் வேலை பார்க்க ஊதியம்...யாருக்கு கசக்கும்... இரத்தினக்கம்பளம் விரித்து திட்டம் வரவேற்கப்பட்டது....


திட்டம் ஆரம்பிக்கப்பட்டபின் இந்த மாடுகள் இயற்கையாக உள்ளூர் காளைகளுடன் இணை சேராமலிருக்க உள்ளூரிலிருந்த காரியார் இனக்காளைகள் அனைத்தும் மலடாக்கப்பட்டன...


அதுதான் உண்மையில் திட்டம் என்பது அப்போது யாருக்கும் புரியவில்லை... ‪ஆண்டுகள் உருண்டன... செயற்கை முறையில் சினையூட்டப்பட்டுப் பிறந்த கன்றுகளெல்லாம் எல்லாம் நோஞ்சானகப் பிறந்தன....


பத்தாண்டுகளுக்குள் பலம்வாய்ந்த, அதிகப் பால் கொடுக்கக் கூடிய நாட்டு காரியார் இனத்தின் ஒரு காளையைக் கூட ஒரிசாவின் காலஹந்தி மாவட்டத்தில் பார்க்க முடியவில்லை...‪


பாலுற்பத்தியில் தன்னிறைவடைந்திருந்த அந்த மாவட்டத்தில் இப்போது ஒவ்வொரு விவசாயியும் பாக்கெட்பால் வாங்குகிறான்!!


1977-78ல் ஒரு லிட்டர் நெய் 7ரூபாய்க்கும் ஒரு லிட்டர் டால்டா 9ரூபாய்க்கும் விற்கப்பட்ட இடத்தில், தற்போது டால்டா வியாபாரம் கொடிகட்டிப் பறக்கிறது!!


திட்டக் காலம் முடிந்ததாக அறிவிக்கப்பட்டவுடன், மாட்டுத்தீவனம் வளர்க்க இலவசமாக வழங்கப்பட்ட நிலங்கள் அனைத்தும் விவசாயிகளிடமிருந்து பறிக்கப் பட்டுவிட்டன.....


கைகொடுத்த பால் தொழில் தொலைந்ததால் காரியார் காளைவளர்த்த இளங்காளைகளெல்லாம் பிழைப்பிற்காக நகரத்து டின் செட்டிற்குள் அவிந்து கொண்டிருக்கிறார்கள் கட்டிடத் தொழிலாளர்களாக...


இது இலவசங்களுக்குப்பின் ஒழிந்திருக்கும் வணிக நோக்கங்களைத் தோலுரிக்கும் ஒரு சிறு சாம்பிள் மட்டுமே.....


"There is no free lunch in the world" என்று ஆங்கிலத்தில் ஒரு சொல்லாடல் உண்டு.... "இவ்வுலகில் எதுவும் இலவசமல்ல" என்பது அதன் பொருள்....


ஜல்லிக் கட்டைத் தடை செய்வதற்கும் நாட்டுக் காளைகளை அழிப்பதற்கும் தொடர்புண்டோ இல்லையோ....
இலவச மோகம் இன அழிப்புச் செய்யும் என்பது மட்டும் ஆழமான உண்மை...

உங்களது கருத்துக்கள் உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன!
தமிழ் / ஆங்கிலத்தில் எழுத இங்கே சொடுக்கவும் [CTRL+G]யை சொடுக்கியும் மாற்றி கொள்ளலாம்
CAPTCHA code
இந்த படத்தில் உள்ள எழுத்துக்களை உள்ளீடவும்